சர்ச்சையை கிளப்பியுள்ள கதிர்காமம் ஆலயத்தின் பொறுப்பாளர் வாகனம்: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட அதிசொகுசு வாகனத்தைப் பயன்படுத்தும் கதிர்காமம் ஆலயத்தின் நிலமே தில்ஷான் குணசேகர தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சிவில் புலனாய்வு முன்னணி ஒருங்கிணைப்பாளர் சஞ்சே மாவத்த இன்று(4) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் சஞ்சே மாவத்த கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் கிடப்பில் போட்டப்பட்ட ஒரு சம்பவத்தை மீண்டும் நாங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொடுத்துள்ளோம். இந்த சம்பவத்தின் முக்கிய பங்காளர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆவார்.
ஒரு நாள்,கூட்டத்தில் உரையாற்றும் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மைக்ரோஃபோன் வேலை செய்வதை மறந்துவிட்டு, தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தார்.
சட்டவிரோத வாகனம்
நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அவர் கூறினார். 'நிலமே மேட்டர். நிலமே ஒருபோதும் கைது செய்யப்பட மாட்டார்.'என்று பூஜித ஜெயசுந்தர கூறியுள்ளார். அந்த நிலமே மேட்டரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொண்டு வந்தோம்.
ஜனாதிபதி அநுரவும் ஒரு முறை நாடாளுமன்றத்தில் பூஜித ஜெயசுந்தரவின் இந்த உரையைப் பற்றிப் பேசினார். இது கதிர்காமம் ஆலயத்தின் நிலமே பற்றியது.அவரை ஏதோ ஒரு குற்றத்திற்கு கைது செய்வதை தடுக்கும் செயல் தொடர்பில கலந்துரையாடப்பட்டதாகும்.
முறைப்பாடு
நிலமே பயன்படுத்திய சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட அதிசொகுசு வாகனம் பற்றிய தகவலை நாங்கள் ஒப்படைத்துள்ளோம். இப்போது அவரால் இந்த வாகனத்தை மறைக்க முடியாது. அனைத்து பதிவு விவரங்களும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
அவரது சகோதரர் இதற்கு முன்பு இந்த வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோத வாகனத்தை வைத்திருந்ததற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
