சட்டவிரோத புலம்பெயர்வு...! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
யுத்த சூழ்நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் எனவும் அது தவறான நடவடிக்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரதூரமான குற்றச்சாட்டு
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இரண்டு இலங்கை பெண்கள் எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு செல்ல முயன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
