சட்டவிரோத துப்பாக்கி பாவனை: பல மனித கொலைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு
முல்லைத்தீவு-மல்லவி பகுதியில் இடியன் துப்பாக்கி எனப்படும் சட்டவிரோத துப்பாக்கி பாவனை அதிரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன் செயற்பாடாக அண்மையில் இடியன் துப்பாக்கியால் சுட்டுப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காக இடியன் துப்பாக்கியினை பயன்படுத்துபவர்கள். தற்போது மனிதர்களை வேட்டையாடும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடருமானால் மேலும் பல மனித கொலைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனை பொலிஸார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
முல்லைத்தீவு - மல்லாவி பாலிநகர் பகுதியில் கடந்த 09.07.23 அன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களிடையே இடம்பெற்ற முரண்பாட்டையடுத்து குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
23 வயதான மகேந்திரன் டிலக்சன் என்ற இளைஞர் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதவான் நீதிமன்றில் முன்னிலை
மல்லாவி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுதுறையினர் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மல்லாவி பொலிஸாரினால் நேற்று (11.07.23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை மூவரையும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சட்டவிரோத துப்பாக்கி பாவனை அதிரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
