கப்பம் வாங்கும் பொலிஸார் உள்ள வரை சட்டவிரோத மண் அகழ்வு தொடரும்...! எழும் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸார் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை என ஈ.பி,ஈர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல். எப். கட்சி காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் (16.09.2025) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த
மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, செங்கலடி, வவுணதீவு, கிரான், வாழைச்சேனை ,வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் நீர்பாசனத் திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட பெரிய ஆறுகள் வாய்க்கால்கள் உள்ளன.
இதில் பெரிய ஆறுகள் ஊடாக கிளை வாய்க்கால்களில் குறித்த பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பிரதேசங்களில் இரவு நேரங்களில் சனி, ஞாயிற்றுக்கழமை உட்பட அனைத்து தினங்களிலும் மண் மாபியாக்களின் செயற்பாடு கடந்த காலங்களில் அதிகரித்த வண்ணம் இருந்தன.
அதை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கை கடைபிடிப்பவர்கள் மட்டுமல்ல நீர்பாசன திணைக்களத்துக்கும் அந்த பங்கு இருக்கின்றது.
அதுமட்டுமல்ல ஒரு சில விவசாய அமைப்புக்களும் மண் அழ்வதற்கான கடிதங்களையும் வழங்கியுள்ளது.
இந்த திணைக்களங்கள் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக அறிக்கை வழங்கும் திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் மண்ணுடன் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த முடியும். ஆனால் விசேட அதிரடிப்படை, பொலிஸ், இராணுவம் தலையிட்டு மண்மாபியாக்களை கட்டுப்படுத்தும் நிலை மாறியிருக்கின்றது.
பல கிராமங்கள் வெள்ளத்தினால் அள்ளுண்டு செல்லும்
எமது மாவட்டம் கடற்கரையை அண்டிய பகுதி எனவே இந்த மண் அகழ்வை தடுத்து நிறுத்தாத பட்சத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தினால் அள்ளுண்டு செல்லக் கூடிய அபாயகரமான நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றதுடன் விவசாய செய்கை முழுமையாக பாதிப்படைய கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல மண் மேடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாவட்டத்தில் கப்பம் வாங்கும் சில பொலிஸார் இருக்கும் வரை சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த முடியாது.
எனவே அப்படிப்பட்ட பொலிஸாரை இனங்கண்டு அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி மண் அகழ்வை தடுத்து நிறுத்த புதிய அரசு செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri