இந்தியப் பிரஜைகளின் சட்டவிரோத நுழைவு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து
இந்தியாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அண்மைய நாட்களில் இலங்கைக்கு நுழைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எச்சரித்துள்ளார்.
அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
மன்னார், புத்தளம் மற்றும் கொச்சிக்கடை ஆகிய கடல் பரப்பிலிருந்து படகுகள் மூலம் நாட்டுக்குள் நுழைந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேச வாசிகள் அறிவித்த பின்னரே அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் அறிந்திருக்கின்றார்கள்.
குறித்த தகவல் மக்களால் வழங்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக நுழைந்தவர்களைப் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தவோ, அவர்களைத் தனிமைப்படுத்தவோ அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.
கோவிட் தொடர்பான அனைத்து இறப்புகளுக்கும் தற்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும். கோவிட் வைரஸ் தொடர்பாகத் தகுந்த முடிவுகளை எடுக்கத் தவறிய அனைவருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
