சட்டவிரோத மாட்டு வண்டி ஓட்டப்பந்தயம்-5 பேர் கைது
களுத்துறை -பண்டாரகம பிரதான வீதியில் சட்டவிரோதமாக ரேக்கலா மாட்டு வண்டி ஓட்டப்பந்தயதில் ஈடுபட்ட 5 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டப்பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட 5 ரேக்கலா மாட்டு வண்டிகள் மற்றும் 5 மாடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொது மக்கள் செய்த முறைப்பாடு
பொது மக்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மொரான்துடுவ பொலிஸார், இன்று காலை கோனதுவ பிரதேசத்தில் இவர்களை கைது செய்துள்ளனர்.
எவ்வித அனுமதிகளையும் பெறாது, பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பிரதான வீதியை பயன்படுத்தி இவர்கள் மாட்டு வண்டி ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பண்டாரகம மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் வசிக்கும் 25 முதல் 35 வயதான நபர்கள் என தெரியவருகிறது.
விலங்கு வதை, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்தமை, வீதி சட்டத்திட்டங்களை மீறியமை மற்றும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
