திருகோணமலையில் தடையுத்தரவை மீறி கட்டப்படும் விகாரை (Photos)
திருகோணமலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் தடை உத்தரவு
எனினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் இடம்பெறும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் திருகோணமலை மக்களினால் நாளை (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
