லிந்துலையில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைதுசெள்ளப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் போய தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மதுபான போத்தல்கள்
குறித்த நபரிடமிருந்து 30 மதுபான முழு போத்தல்களும், 96 ரா மதுபான போத்தல்களும், மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்களை இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
