மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
முனைக்காடு, வாவிகரை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்றையதினம் (06.01.2024) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவிலான கோடா, 9 பெரல்கள் மற்றும் ஏனைய கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய சந்தேகநபர்கள்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமானவின் ஆலோசனைக்கமைய குறித்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை கண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
