ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும் வடக்கு மாகாண தொடருந்து சேவைகள்
வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (07.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே தொடருந்து சேவைகள் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொடருந்து சேவை
இதேவேளை, மட்டக்களப்பு தொடருந்து பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam