மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல் - எழுந்துள்ள சிக்கல்

Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Apr 25, 2026 05:13 PM GMT
Report

மானிப்பாய் ஜே/139 கிராம சேவகர் பிரிவில் முறையற்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டு ஒரு இரண்டுமாடி கட்டடமானது அமைக்கப்பட்டு வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கருத்து தெரிவிக்கையில், எல்லையையும் மீறி எங்களது காணிக்குள் இரண்டு மாடி கட்டடம் ஒன்று கடந்த வருடம் தொடக்கம் கட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

நிறுத்தப்பட்ட நிர்மாண பணிகள் 

இது முறையற்ற வகையில் கட்டப்பட்டு வருகின்றது என்பதை நான் வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையினர், உள்ளூராட்சி திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கினேன்.

இருப்பினும் மேற்குறித்த எந்த அரச நிறுவனங்களும் எமக்கு நீதியை வழங்காமல் அவர்களுக்காகவே கதைத்தனர். அதன்பின்னர் வடக்கு மாகாண ஆளுநரிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் அந்த கட்டட நிர்மாண பணிகளை இடைநிறுத்துமாறு கடந்த நவம்பர் மாதம் எழுத்துமூலம் உத்தரவிட்டார். 

மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல் - எழுந்துள்ள சிக்கல் | Illegal Action Of Manipay Pradeshiya Sabha

அதன்படி நிறுத்தப்பட்ட நிர்மாண பணிகள் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பிரதேச சபையினர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நான் பிரதேச சபையினரிடம் வினவியவேளை சரியாக தான் அனுமதி வழங்கியதாகவும், விரும்பினால் என்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் கூறினர்.

முறையற்ற கட்டடங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது உள்ளூராட்சி சபைகளின் கடமை. ஆனால் அவர்கள் முறையற்ற வகையில் அனுமதியையும் வழங்கிவிட்டு, எனது காணிக்குள் கட்டப்படும் கட்டடத்திற்கு எதிராக என்னை நீதிமன்றம் செல்லுமாறு கூறுகின்றார்கள்.

எமது காணிக்குள் வெட்டப்பட்ட குறித்த கட்டடத்திற்கான குழியானது மூடப்பட்டு, கட்டடத்தின் உரிமையாளரது காணிக்குள்ளே மீண்டும் குழி வெட்டப்பட்டு நிர்மாண பணிகள் இடம்பெறுவதை தமது தொழில்நுட்ப உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியதாக வலி தென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சுபாகர் எழுத்துமூலம் கூறியுள்ளார்.

ஆனால் மீண்டும் நான் உப தவிசாளரை நேரில் தொடர்புகொண்டு வினவியபோது, தனக்கு அந்த கடிதம் குறித்து தெரியாது என்றும், தான் பார்க்காமல் கையொப்பம் இட்டதாகவும் பொறுப்பற்ற வகையில் கூறுகின்றார்.

மரங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு

எனது காணி எல்லைக்கு உள்ளே நின்ற பயன்தரும் மரங்களான தென்னைகள், மாமரங்கள், நாவல், வேம்பு போன்ற மரங்கள் அந்த கட்டடத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்டுமாறு பிரதேச சபையினர் அச்சுறுத்திய நிலையில் நாங்கள் அவற்றை வெட்டிவிட்டோம்.

அந்த வெட்டிய மரங்களும் தற்போது எமது காணிக்குள்ளேயே காணப்படுகின்றன. இப்போது அந்த மரங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கூறுகின்றார்கள்.

மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல் - எழுந்துள்ள சிக்கல் | Illegal Action Of Manipay Pradeshiya Sabha

பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கடந்த 15.02.2026 அன்று பல விடயங்களை கோரியிருந்தேன்.. இருப்பினும் அவர்கள் இதுவரை எமக்கு முறையான தகவல்களை தரவில்லை.

குறித்த கட்டடம் முறையற்ற வகையில் கட்டப்படுவதை நகர் அபிவிருத்தி அதிகார சபையினர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினர் தற்போது ஒத்துக்கொள்கின்றனர். தமக்கு பிரச்சினை வரப்போகின்றது என்பதால் குறித்த கட்டடம் அமைக்கப்படுகின்றமை பிழையானது என உப தவிசாளர் தற்போது கூறியுள்ளார்.

ஆளுநர் நீங்கள் பிறப்பித்த உத்தரவை நீர்த்துப் போகாமல் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது உங்களது கடமை. அதனை நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில் நீங்களும் ஊழலுக்கு துணைபோகும் ஒருவர் என்றே நாங்கள் கருத வேண்டி ஏற்படும் என்றனர்.

பாகிஸ்தானியப் போர் விமானங்களின் கர்ஜனைக்கு மத்தியில் தரையிறங்கிய அப்பாஸ் அராக்சி! நள்ளிரவில் நடந்த அவசர பேச்சுவார்த்தை

பாகிஸ்தானியப் போர் விமானங்களின் கர்ஜனைக்கு மத்தியில் தரையிறங்கிய அப்பாஸ் அராக்சி! நள்ளிரவில் நடந்த அவசர பேச்சுவார்த்தை

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US