கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதி
பர் ஏ.சந்திரசேன ,உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள்,இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கனிய வளத்திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தவது தொடர்பாகவும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல் பற்றிய மாவட்ட அரசாங்கதிபரின் குரல் பதிவும் உள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam