மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos)
புதிய இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தமிழரசு கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்ட நிர்வாகத் தெரிவை முடிக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னரே புதிய நிர்வாகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அதேவேளை, கட்சியின் யாப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் மத்திய கூட்டம் ஒன்றை நடத்தி அதைத் திருத்தி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கே தெரியாது
மேலும் உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் திருகோணமலையில் சம்பந்தனிற்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதனால் அதனை ஆராயுமாறு சம்பந்தன் தன்னிடம் கூறியதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியதாகவும், அதைப் விசாரிப்பதற்கு மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையிலான ஒழுக்காற்றுக் குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் யாழ்ப்பாணத்தில் தன்னைப் புறக்கணித்தமை குறித்து மாவை தனது நீண்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிவைத்தே தனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தான் கட்சியில் இருக்கிறேனா என தனக்கே தெரியாது என்றும் இத்தனை வருடமாக இவ்வாறானதொரு விடயம் நடக்கவில்லை என்று மாவை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் குகதாசன் குறிப்பிடுகையில் இரா.சம்பந்தன் தொடர்பில் குழு அமைத்து திருகோணமலை மாவட்டத்தில் ஆராய்வதற்கு விசேட குழு அமைப்பது நல்ல விடயம் ஆனால், இரா.சம்பந்தன் மாவட்டத்திற்கே வருவதில்லை என்பதையும் கூற விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.
குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.
இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கட்சியின் செயற்பாடுகள்
இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச்செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
