இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு
கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு இந்த புதிய திகதிகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணம் பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய திகதி
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு, இன்று ஏற்பாட்டுக்குழுவினால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு
எனினும், இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு மாறியுள்ளது.
மேலும், இலங்கை இசை ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வழங்கிய உறுதியை நிறைவேற்றும் முகமாக குறித்த அறிவிப்பு மாற்றம்பெற்றுள்ளது.

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
