முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்
கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம் களவாடப்பட்டது. இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்றோம்.
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் அது இளவாலை பொலிஸ் பிரிவுக்குள் வரும் என கூறினர்.
வெற்றுக் கடிதாசி
ஆகையால், நாங்கள் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்றோம்.
எங்களை 6.00 மணிவரை காக்க வைத்தனர். பின்னர் முறைப்பாடும் பதிவு செய்யாமல் ஒரு வெற்றுக் கடிதாசியில் குறித்து வைத்துவிட்டு எங்களை திருப்பி அனுப்பினர்.
பணத்தை திருடிய நபர் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தப்பிச்சென்றார். அந்தவகையில் அந்த துவிச்சக்கர வண்டியின் இலக்கம் யாருடைய பெயரில் பதிவில் உள்ளது என்பதை வைத்து நடவடிக்கை எடுக்துமாறு கூறினேன்.
முறைகேடான செயற்பாடுகள்
இதன்போது, இளவாலை பொலிஸார் "உனக்கு அறிவு இல்லையா, மூளை இல்லையா, வேறு ஆட்களின் கதையை வைத்து ஏன் கதைக்கிறாய்" என மிரட்டினார்கள்.
எமது பணம் தொலைந்தது தொடர்பாக இதுவரை முறைப்பாடு பதிவு செய்யவும் இல்லை, பணத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
