அடுத்த ஆண்டு செழிப்பாக இருக்கும்! இளங்குமரன் எம்.பியின் வாக்குறுதி
அடுத்த ஆண்டினை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் செழிப்பான ஆண்டாக மாற்றியமைப்போம் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பண்முகப்படுத்தப்பட்ட நிதி பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரணைமடு குளத்தில் வாழ்வாதாரமாக நன்னீர் மின்பிடியில் ஈடுபடும் இரண்டு மீனவ சங்கங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது, பிரதேச செயலக திட்டமிடல் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த இளங்குமரன் எம்.பி, மக்களுடைய வரிப்பணத்தில் திறைசேரிக்கு செல்லும் நிதியின் மூலமே மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு மிகவும் செழிப்பான ஆண்டாக இருக்கும்.
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்து முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது அல்ல. திரும்பவும் ரணில், மகிந்தவை கொண்டு வந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு தான் அவர்கள் முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri