சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சி செயற்குழு கூட்டம்
தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் இக் கூட்டம் இன்று (23.2.2024) நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கட்சியின் உள்ளக முரண்பாடுகள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கட்சிக்குள் உள்ள உள்ளக முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள அறிவகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியின் செயலாளர் பதவி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
