மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
மொனராகலை பிரதேசத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா செடிகள் மீட்பு

குறித்த நபரிடமிருந்து 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அத்தியட்சகரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஜீப் வண்டியொன்று என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri