இழப்புகள் குறித்து சிந்தித்துக்கொண்டு இருப்போமானால் நாங்கள் கோளைகளாக மாறும் நிலையே உருவாகும்: கே.கருணாகரன் (VIDEO)
இழப்புகள் குறித்து சிந்தித்துக்கொண்டு இருப்போமானால் நாங்கள் முன்னேற்றமடையாதவர்களாகவும் கோளைகளாகவும் மாறும் நிலையே உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
சுபிட்சத்தின் நோக்கு " கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுவதை நோக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின், ஜனாதிபதியின் தேசிய கொள்ளை பிரகடனமாகிய “சுபிட்சத்தின் நோக்கு " கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் நிகழ்வு கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி திட்டம் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் கோவிட் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்நிலை மூலமாக நடைபெற்றிருந்தன.
"நாட்டிற்குச் சுமை இல்லாத உழைக்கும் தலைமுறை "எனும் தொனிப்பொருளில் "தொழில் வழிகாட்டலை சமூகமயமாக்குதல்" எனும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம் மற்றும் வினாவிடை போட்டி போட்டி என்பன நடைபெற்றிருந்தன.
இப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று எமது மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த சாதனையாளர்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்பெற்றவர்களுக்கான பணப் பரிசுகளும், சான்றிதழ்களும் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கோவிட் காலப்பகுதியில் பல்வேறு மன அழுத்தங்களுக்குள்ளும் ஆளாகியிருந்த
மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளும் ஆர்வத்துடன் தேசிய தொழில் வழிகாட்டல்
போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
