அமெரிக்கா விதித்த வரியை ரணில் ஒரு தொலைபேசி அழைப்பில் ரத்து செய்திருப்பார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்படடுள்ள வரியை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் ரத்து செய்திருப்பார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீது பாரியளவு தொகை சுங்க வரியை விதித்துள்ளது. இதன்படி இலங்கை மீது 44 வீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால் இவ்வாறு வரி விதிக்கப்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் ஆலோசகரான எலோன் மஸ்கின் ஆலோசனைக்கு அமைய இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, எலோன் மஸ்கின் நெருங்கிய நண்பர் எனவும் இந்த நட்புறவை பயன்படுத்தி இலகுவில் வரி விதிப்பில் சலுகைகள் பெற்றிருக்கலாம் எனவும் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்க மாட்டார் என்பதனால் இந்த சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கப் பெறாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
44 வீத வரியை முழுமையாக நீக்கியிருக்காவிட்டாலும் ரணில் பதவியில் இருந்திருந்தால் குறைந்தபட்சம் சுங்க வரியை 24 வீதத்திற்கு குறைத்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.