இந்தியாவுடன் -இலங்கை திட்டங்களை முன்னெடுத்தால் கட்சி அதனை ஆதரிக்கும்- ஐக்கிய தேசியக்கட்சி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்(Narendra Modi) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்(Ranil Wickremesinghe) இடையில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Wajira Abeywardana) கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், ஐக்கிய தேசியக்கட்சி தமது முழு ஆதரவையும் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் எட்டாவது நிறைவேற்றுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது தலைமையில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை முன்னோக்கி நகர்த்துவதன் முக்கியத்துவத்தை அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.
கோரிக்கை
அத்துடன், எந்த அடிப்படையும் இல்லாமல் அவற்றைக் கைவிட வேண்டாம் என்றும் அவர் தமது அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையிலேயே வஜிர அபேவர்த்தனவின் கருத்தும் வெளியாகியுள்ளது அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
