ஏர்முனை மடங்கினாலும்,பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் : மு.முகுந்தகஜன் (Photo)
ஒரு நாட்டில் ஏர்முனை மடங்கினாலும், பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுபினர் மு.முகுந்தகஜன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதிற்கு கண்டம் தெரிவிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டடையினை வன்மையாக கண்டிப்பதுடன் கடந்த காலங்களிலும் பல சந்தர்பங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் பல தடவைகள் கண்டனப்பிரேரணைகள் நிறைவேற்றியுள்ளேன்.
எனவே தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக சுதந்திரத்தின் மீதும் இடம்பெறுகின்ற வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்.
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு நாட்டில் ஏர்முனை மடங்கினாலும், பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் என்பார்கள்.
இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்குதலுக்கு உள்ளானதை வன்மையாக கண்டிக்கின்றேன்.


Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
