வசிம் தாஜுதீன் கொலை விவகாரம்! நாமல் ராஜபக்ஸ சம்மந்தப்படாவிட்டால் பயப்பட தேவையில்லை - ஜெகதீஸ்வரர் எம்பி
நாமல் ராஜபக்ஸவின் மடியில் கனம்இருக்குமாக இருந்தால் அவர் பயப்படவேண்டும் கனம் இல்லை என்றால் அவர் அதனை பற்றி பொருட்படுத்த தேவையில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வசிம் தாஜுதீன்கொலை
அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடக இந்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான நன்நீர் மீன்பிடித்துறையினை விருத்தி செய்வது பிரதான இலக்காக கொண்டு இதற்கான கலந்துரையாடல் ஒன்று விசுவமடு கிழக்கு கிராம அலுவலகர் பிரிவில் இன்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாசிம்தாயூதீன் கொலை தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்ற இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த கொலை இடம்பெற்ற காலத்தில் இருந்தே அதில் சந்தேகம் இருக்கின்றது அது தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் அதனை வெளிப்படுத்தி இருக்கின்றன.
முழுமையான விசாரணை
இது அரசியல் பின்புலமோ அல்லது பாதாளஉலககுழுவின் சம்மந்தமோ இருக்கலாம் என்ற ஜயம் அந்த காலத்தில் இருந்து வந்தது.
ஆனாலும் அந்த விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் ஆதங்கமாகவும் இருந்தது அந்தவகையில் சரியான முறையில் சரியான கோணத்தில் அந்த விசாரணைகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.
என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இதில் எந்த அரசியல் பிரமுகரும் கலக்கமடையத்தேவையில்லை மடியில் கனம் இருந்தால்தான் பயப்படவேண்டும்.
நாமல் ராஜபக்ஸவின் மடியில் கனம்இருக்குமாக இருந்தால் அவர் பயப்படவேண்டும் கனம் இல்லை என்றால் அவர் அதனை பற்றி பொருட்படுத்த தேவையில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையினை எமது அரசாங்கம் மேற்கொள்ளும் யார் யார் தொடர்பு பட்டிருக்கின்றார்களோ அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும் இது மட்டுமல்ல இதற்கு அப்பால் சென்று இது போன்ற பல்வேறு வழங்குகள் இலங்கையில் காணப்படுகின்றன மூடிமறைக்கப்பட்ட வழங்குகள்,அரசியல் பலத்தினை பயன்படுத்தி இல்லாமல் செய்யப்பட்ட வழங்குகள்,கோப்புகளை அடியில் போடப்பட்ட வழக்குகள் என்று பல இருக்கின்றன இந்த அரசின் காலப்பகுதியில் அவைஅனைத்தும் பரிசீலனை செய்து சட்டநடவடிக்கை எடுக்க அரசு பின்னிற்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



