அரசாங்கத்தை அழிக்க முயற்சித்தால் முன்னரே அவர்களை விரட்டி விடுவோம்
இம்முறை குகையை உடைத்து கொண்டு செல்லும் வரை வேடிக்கை பார்க்க போவதில்லை எனவும், அதற்கு முன்னர் விரட்டியடிக்க போவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கூறியதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
“இது நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கம். இம்முறை குகையை உடைத்துக்கொண்டு வெளியில் சென்று அரசாங்கத்தை அழிக்க எவராவது முயற்சித்தால் நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம். குகையை உடைத்துக்கொண்டு வெளியேறும் வரை இம்முறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்களை முன்கூட்டிய விரட்டி விடுவோம்” என பசில் ராஜபக்ச கூறியதாக உதயங்க வீரதுங்க தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஹைனா என்ற விலங்கு ஆபிரிக்க நாடுகளில் இருக்கின்றது.ஹைனா என்ற இந்த விலங்குகள் எப்போது சிங்களத்தின் பின்னாலேயே திரியும். இந்த விலங்குகளுக்கு தனியாக வேட்டையாட முடியாது என்பதே இதற்கு காரணம்.
சிங்கம் வேட்டையாடும் உணவின் ஒரு பகுதியை கொள்ளையிடும் பழக்கம் ஹைனாவுக்கு இருக்கின்றது. வாய்ப்பு கிடைத்தால் சிங்ககத்தையும் ஹைனா கொன்று சாப்பிடக் கூடிய விலங்கினம்.
அன்றாட உணவை தேடிக்கொள்ளுமே தவிர, ஹைனாவால் காட்டில் எந்த புரட்சியையும் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
