கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை IDP Education அறிவித்துள்ளது.
இதற்கமைய IDP Education, IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
IELTS தேர்வாளர்கள் ஆகஸ்ட் முதல் தேர்வின் அனைத்து பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6.0 புள்ளிகளை பெற வேண்டிய அவசியமில்லை.
ஆகஸ்ட் 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10 முதல் நடைமுறை
ஒரு முறை ஒரு பரீட்சையில் தோன்றி கேட்டல்(Listening), பேசுதல்(Speaking),எழுதுதல்(Writing) மற்றும் வாசித்தல் (Reading) செய்து தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால் மீண்டும் அதை தேர்வு செய்து மதிப்பெண் தேவையான ஒரு தேர்வை மட்டுமே செய்துக்கொள்ள முடியும்.
கனடாவில் தங்கள் கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்கள் SDS திட்டத்தின் கீழ் புதிய ஆங்கில தேர்வுதேவைகளை செய்துக்கொள்ள முடியும்.
இந்த முறையானது தற்போது கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |