வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் சிலைகள் அன்பளிப்பு
நெடுங்கேணி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யத் தேவையான அனைத்து சிலைகளும் சிவபூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் நேற்று (31.03.2023) இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகள்
மேலும் தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால், பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள் வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பெளத்த தொல்லியல்திணைக்களத்தின் அத்துமீறல்
மேலும் குறித்த கலந்துரையாடலில் இந்து மதம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படிருந்தது.
இக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பிரதிநிதிகள் போருக்குப் பின்னர் மதமாற்றத்துக்கு உள்ளானவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு திரும்ப அழைத்தல், கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படும் மதமாற்றத்தினைத் தடுத்தல்.
அத்துடன் பெளத்த தொல்லியல்திணைக்களத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான தீர்வுகளைப் பெறுதல்இ வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அழிக்கப்பட்ட சமய சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட விடயங்களைக் கலந்துரையாடியிருந்தனர்.
இதேவேளை இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பட்டியலிடப்பட்டு குறித்த அறிக்கை இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
