ஈரானின் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்
ஈரானைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இன்றைய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானிய ஆட்சியைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் அழிக்கப்பட்டனர் என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஈரானிய அரசாங்க உறுப்பினர்கள் கூடியிருந்த மூன்று தளங்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தயார் நிலை
"மதிப்புமிக்க மற்றும் விரிவான" இலக்குகளின் பட்டியலை உருவாக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) அமெரிக்க இராணுவத்துடன் "நெருக்கமான ஒத்துழைப்பில்" ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

"தேவைக்கேற்ப ஈரானில் தாக்குதல் நடத்த ஐடிஎஃப் தயாராக உள்ளது" என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஈரானைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் தொடர்பில் எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri