ஐ.தே.க வின் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
ஐக்கிய தேசியக் கட்சியின் பயிற்சிபெற்ற பேச்சாளர்களுக்கு கட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் குறித்த பேச்சாளர்களுக்கு வதிவிட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திறமையான கட்சி செயற்பாட்டாளர்கள்
நாடளாவிய ரீதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான கட்சி செயற்பாட்டாளர்களுக்கு கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்த்தன, முன்னாள் அமைச்சர் ஆனந்த குலரத்ன, அரசியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, ஐ.தே.க.வின் நிறைவேற்று அதிகாரி சாமெல் செனரத், லக்வனிதா சாந்தினி கோன்கஹகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |