நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் (31) நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளி பள்ளிவாசலில் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றுள்ளது.
பல்லாயிரக் கணக்கான மக்கள்
அத்தோடு, பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கேற்புடன் காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், மலர்ந்துள்ள. புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினர்.
புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும் இன்று (31) காலை மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளியிலும் நடைபெற்றது.
மூர்வீதி ஜும்மா பள்ளி வாசலின் பிரதான மௌலவி அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
பெருநாள் தொழுகை
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.கலீலுர் ரஹ்மான் (ஸலபி) நிகழ்த்தினார்.
கந்தளாய் இலாஹிய்யா ஜும்மா மஸ்ஜீத் மற்றும் பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜீத் ஆகிய இடங்களில் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொழுகைக்கான ஏற்பாடுகள்
மேலும், நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது.
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ,முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் ஈச் கழகம் மற்றும் புஹாரி ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
