நெதர்லாந்தில் இருந்து தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள்
13 கோடியே 64 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் என்ற மெதெம்பட்டமைன் போதை மாத்திரைகள் நெதர்லாந்தில் இருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
13 ஆயிரத்து 640 போதை மாத்திரைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான(சட்ட விவகாரம்) சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
போலி முகவரிக்கு அனுப்பி வைப்பு
கடந்த மார்ச் மாதம் 4 ஆமு் திகதி நெதர்லாந்தில் இருந்து விமான மூலம் மொறட்டுவை பிரதேசத்தில் போலி முகவரி ஒன்றுக்கு இந்த போதை மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த மாத்திரைகள் அடங்கிய பொதியை பெற்றுக்கொள்ள எவரும் வாராத காரணத்தினால,அதனை திறந்து பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த பொதி இன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அதிகாரிகள், இலங்கை சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த போதை மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டிருந்தாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய்
மெதெம்பட்டமைன் என்ற இந்த போதை மாத்திரை ஒன்றின் சாதாரண சந்தை பெறுமதி 10 ஆயிரம் ரூபாய் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனைகளை அடுத்து மெதெம்பட்டமைன் போதை மாத்திரை தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
