மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
இந்த நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான இரசாயனம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய மற்றும் நலவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த இரண்டு கொள்கலன் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த இரசாயனம் அடங்கிய இரண்டு கொள்கலன் பெட்டிகள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க ஏற்கனவே முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கைது
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பெக்கோ சமனிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த இரசாயனம் அடங்கிய கொள்கலன் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இரசாயன இருப்பு கொண்ட கொள்கலன் பெட்டிகள் நிலத்தின் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



