யாழில் தவளையுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்தவருக்கு அபராதம் -செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று(16.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(14) ஆலய சூழலில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் ஐஸ்கிறீமிற்குள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ்கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |