தொடர் தோல்விகளுக்காக மனம் வருந்துகிறேன்! சொல்ல எதுவும் இல்லை : குசல் மெண்டிஸ் கவலை
உலகக் கிண்ணப் போட்டிகளில் தோல்வியடைந்தமையையிட்டு மிகவும் வருந்துகின்றேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்து இன்று காலை நாட்டை வந்தடைந்தது.
அணியில் இருந்து ஆதரவு
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்வி குறித்து குசல் மெண்டிஸ் குறிப்பிடுகையில்,
போட்டியைப் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன். எம்மால் சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை. அதைத் தவிர, எனக்கு சொல்ல எதுவும் இல்லை.
எமது ஆரம்பம் சிறப்பாக இருந்தது, போட்டியில் தோல்வியடையும் போது, என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம், ஒரு அணியாக எங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்பார்த்தோம்.
அணியில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தனர். எனக்கு அணியில் இருந்து நிறைய ஆதரவு கிடைத்தது.
போட்டிகளில் வெற்றி தோல்வியை கட்டுப்படுத்துவது கடினம். இனி வரும் தொடர்களை பார்த்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
