அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(08.10.2023) இடம்பெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
199 ஓட்டங்கள்
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் கம்மின்ஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.
அதன்படி முதலித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்துள்ளது.
டேவிட் வார்னர் சாதனை
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் 97 ஓட்டங்களையும் (ஆட்டமிழப்பின்றி), விராட் கோலி 85 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.
இந்நிலையில், இந்த போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுலகரின் உலகக்கோப்பை சாதனையை டேவிட் வார்னர் முறையடித்தார்.
டேவிட் வார்னர் தனது 2வது பவுண்டரியை விரட்டியபோது உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ஓட்டங்கள் குவித்த சாதனையை தனதாக்கிகொண்டார்.