மாலைதீவு மீது தாக்குதல் நடாத்திய 80 ஈழத்தமிழ் போராளிகள்!! சாகசங்களும் - சதிக் குற்றசாட்டுக்களும் (Video)
‘India out’ என்ற கோஷத்தை முன்வைத்து மாலைதீவு அரசதலைவர் தேர்தலில் குதித்திருந்த சீன ஆதரவு தலைவர் Mohammed Muizzu மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெறும் 430 மைல்கள் துரத்தில் இருக்கின்றதும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்துவருவதுமான மாலைதீவில், இந்தியாவுக்கு எதிரான சக்தியின் கரம் ஓங்குவதை இந்தியாவின் உளவு அமைப்பு எப்படிப் பார்க்கும்?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதானால், இன்றைக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் மாலைதீவில் நடந்த ஒரு ஆட்சிமாற்றம் பற்றிய வரலாற்றுச் சம்பவத்திற்கு நாம் சென்று திரும்பவேண்டும்.
80களின் இறுதியில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த மாலைதீவின் ஆட்சியை இந்தியாவுக்குச் சார்பானதாக மாற்றும்படியாக ஒரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாகாசங்களும், சதிக் குற்றசாட்டுக்களும், ஏராளமாக இரகசியப் பின்னூட்டங்களும் நிறைந்த அந்த அதிரடி ஒப்பரேஷன் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: