ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2027 தொடருக்கான அட்டவணை வெளியீடு
ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2027 தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.
இந்த தொடர் அக்டோபர் 2ஆம் திகதி விண்ட்ஹோக்கில் நடைபெறும். மூன்று அணிகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் போட்டிகளுடன் ஆரம்பமாகிறது.
இதன்மூலம் குழு நிலைக்குத் தகுதிபெறும் இறுதி அணி தீர்மானிக்கப்படும்.
இதனை தொடர்ந்து, தகுதிபெற்ற 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்:
CWC 2027 குழுக்கள்
| குழு A | குழு B |
| இந்தியா | நியூசிலாந்து |
| அவுஸ்திரேலியா | தென்னாப்பிரிக்கா |
| பாகிஸ்தான் | இலங்கை |
| ஆப்கானிஸ்தான் | இங்கிலாந்து |
| ஸிம்பாப்வே | பங்களாதேஷ் |
2027அக்டோபர் 7 அன்று கேப் டவுனில் நடைபெறும் முதல் குழு நிலை போட்டியில் நடப்பு செம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 10 அன்று ஜோஹன்னஸ்பாக்கில் நடைபெறும்.

போட்டி அட்டவணை
- அக்டோபர் 10: இலங்கை எதிர் தகுதிபெறும் அணி B (விண்ட்ஹோக்) போட்டி இடம்பெறவுள்ளது.
- அக்டோபர் 13: இலங்கை எதிர் இங்கிலாந்து (விண்ட்ஹோக்)
- அக்டோபர் 16: இலங்கை எதிர் பங்களாதேஷ் (டர்பன்)
- அக்டோபர் 20: இலங்கை எதிர் நியூசிலாந்து (ஜோஹன்னஸ்பாக்)
- அக்டோபர் 22: இலங்கை எதிர் தென்னாப்பிரிக்கா (ஜோஹன்னஸ்பாக்)
ஒவ்வொரு குழுவிலும் உள்ள முதல் 3 அணிகள் மற்றும் இரண்டு குழுக்களிலும் சிறந்த 4வது இடம் பிடிக்கும் அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சுற்று அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும். இதனை தொடந்து, முதல் அரை இறுதி: நவம்பர் 17 (கேப் டவுன்) இரண்டாவது அரைஇறுதி: நவம்பர் 18 (த்ஷ்வானே) நடைபெறும்.
இறுதிப்போட்டி நவம்பர் 21 (ஜோஹன்னஸ்பாக் - மாற்று நாள்: நவம்பர் 22) நடைபெறும். போட்டிகள் தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளிலுள்ள மொத்தம் 12 மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.