2027 முதல் 2035 வரையான ஐசிசி கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), 2035 ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள முக்கிய ஆண்கள் கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணைகளை அங்கீகரித்துள்ளது.
இதன்படி, 2028 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து, 2030, 2032 மற்றும் 2034 ஆம் ஆண்டுகளிலும் T20 உலக கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலக டெஸ்ட் செம்பியன்ஷி இறுதிப்போட்டிகள்
2031 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை இந்தியாவும் பங்களாதேஷும் இணைந்து நடத்தவுள்ளன.

2035 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான நாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
2033 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கான நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், அடுத்தடுத்த செம்பியன்ஸ் கிண்ணத்தொடர்களில் ஒன்று 2033 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகவும் ICC அறிவித்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய அநுராதபுர மோதல் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின