ஐ.சி.சி. செம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு அச்சுருத்தலாக மாறியுள்ள பாகிஸ்தான்
ஐ.சி.சி. செம்பியன்ஸ் கிண்ண தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரச்சினைகளை இதுவரை தமது நாடு சரிசெய்யவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பங்களாதேஷ், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் பாகிஸ்தான் அணி மோதும் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் கிண்ணத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.
பாதுகாப்பு பிரச்சனை
இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் இதுவரை சரிசெய்யவில்லை.
பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர். அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும்.
அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.
நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செம்பியன்ஸ் கிண்ண தொடர்
ஐ.சி.சி. செம்பியன்ஸ் கிண்ண தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சனையால் 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா தடைசெய்து வருகிறது.
மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது மைதானங்களில் இந்தியா விளையாடி வருகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |