நுவரெலியாவில் இடம்பெற்ற இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்தி நிகழ்வு
கடந்த வாரம் துரதிஷ்டவசமாக விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனை நிகழ்வு நுவரெலியா - தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondman) தலைமையில் தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31.05.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், அமைச்சரின் இணைப்பு செயலாளர் முகமட் காதர், இஸ்லாமிய மதத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜும்மா தொழுகை
அதேவேளை, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
