ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியாது ஏன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானிக்கவில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு குழுவினரில் இருந்து தெரிவு செய்யும்.
மகிந்த போட்டியிட முடியாது
எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இலங்கையின் தேர்தல் சட்டத்தின் படி மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டயிடும் வேட்பாளர் தொடர்பில் பல பெயர்கள் இதுவரையில் முன்மொழியப்பட்டுள்ளன. யார் அந்த வேட்பாளர் என பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டயிடும் வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இன்னமும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri