மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவேன் - உதயங்க
ஜூன் மாதத்தில் மீண்டும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தொழிற்துறையின்றி இலங்கை எந்த சந்தர்ப்பத்தில் முன்நோக்கி செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நோயை வெற்றிக்கொள்ள பாடுபடுவதை போல சுற்றுலா தொழிற்துறையையும் வீழ்ந்து விடாமல் பாதுகாத்து வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் உதயங்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா தொழிற்துறையின்றி அதனை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் உதயங்க வீரதுங்க இதனை கூறியுள்ளார். உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் சித்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.