பிரதமர் மீது நடத்தப்படும் பாலின அடிப்படையிலான தாக்குதல்! ரஜீவன் எம்.பி கண்டனம்

Harini Amarasuriya NPP Government
By Kajinthan Jan 08, 2026 06:23 PM GMT
Report

பிரதமர் மீது நடத்தப்படும் தனிநபர் மற்றும் பாலின அடிப்படையிலான தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்கம் அண்மையில் இடம்பெற்ற தரம் 06 பாடப்புத்தகத்தில் ஒரு தவறு குறித்து பொறுப்புடன் ஒப்புக்கொண்டு, அதனை விசாரிக்க காவல்துறை விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

மரணத்தின் விளிம்பில் 60 நாட்களுக்கு மேல் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

மரணத்தின் விளிம்பில் 60 நாட்களுக்கு மேல் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

கண்டனம்

இது ஒரு பொறுப்புள்ள ஆட்சியின் அடையாளமாகும். அந்த வகையில் இந்த நடவடிக்கையை ஒரு நேர்மறையான முன்னேற்றமாகவே நான் பார்க்கிறேன்.

அதே நேரத்தில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மீது தனிநபர் ரீதியாகவும், அவமதிப்பான மொழிகளிலும், குறிப்பாக அவரது பாலினம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

பிரதமர் மீது நடத்தப்படும் பாலின அடிப்படையிலான தாக்குதல்! ரஜீவன் எம்.பி கண்டனம் | I Strongly Condemn Personal Attacks Pm Rajeevan Mp

அரசியல் விமர்சனம் என்பது அரசின் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக இருக்க வேண்டும். தனிநபர்களை இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது மரியாதையைச் சிதைக்கும் வகையிலான தாக்குதல்கள் ஜனநாயக அரசியல் பண்பாட்டிற்கே எதிரானவை.

எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இவ்வாறான தாக்குதல்களை தங்களின் முக்கிய அரசியல் நோக்கமாக மாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது.

குறிப்பாக, பிரதமரை அவமதிக்கும் வகையில், அவரது பாலியல் அடையாளம் தொடர்பாக பொய்யான, கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி

தனிநபர் தாக்குதல்

இத்தகைய அரசியல் கலாச்சாரத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன்; அதனைத் தீவிரமாகக் கண்டிக்கிறேன். பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.

அவர் ஒரு பெண் என்பதற்காகவோ, அல்லது அவரது தனிப்பட்ட அடையாளங்களைப் பற்றி ஊகங்கள் உருவாக்குவதற்காகவோ அவமதிக்கப்படக் கூடாது.

பிரதமர் மீது நடத்தப்படும் பாலின அடிப்படையிலான தாக்குதல்! ரஜீவன் எம்.பி கண்டனம் | I Strongly Condemn Personal Attacks Pm Rajeevan Mp

நாங்கள் எப்போதும் மரியாதை, சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் நாகரிக அரசியல் பண்பாட்டிற்காக உறுதியாக நிற்போம்.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை மரியாதையுடனும், பொறுப்புடனும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தனிநபர் தாக்குதல்களும், வெறுப்புப் பேச்சும் எந்தவொரு அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்

தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US