துண்டு துண்டாக சிதறிக் கிடந்த எமது மக்களின் உடல்களை நான் நேரில் பார்த்தேன்! - கார்தினல் ரஞ்சித் ஆண்டகை
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட எமது மக்களின் துண்டுத் துண்டுடாக சிதறிக் கிடந்த உடல்களை நான் நேரில் பார்த்திருந்தேன். அதனை அரசியல்வாதிகள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது”
இவ்வாறு கொழும்பு பேராயர் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முழுமையடையாத ஒன்றாகும்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட எமது மக்களின் துண்டுத் துண்டுடாக சிதறிக் கிடந்த உடல்களை நான் நேரில் பார்த்திருந்தேன். அதனை அரசியல்வாதிகள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது”
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு முடிந்தவரை விசாரித்திருக்கலாம், ஆனால் அது ஒரு முழுமையான அறிக்கை அல்ல.
இங்கே சில அடிப்படை உண்மைகள் உள்ளன,
ஆனால் இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி அதற்கு நிதியளித்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே, இந்த ஆணையத்தின் அறிக்கையில் நாங்கள் திருப்தி அடைய முடியாது. ” என தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri