கர்தினால் கூறுவது போல் நான் பறங்கி அல்ல-டயனா கமகே
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுவது போல் தான் பறங்கி அல்ல எனவும் சிறந்த பௌத்த குல பெண் எனவும் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் கர்தினால் மெல் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கர்தினாலை யாரோ தவறாக வழி நடத்தியுள்ளனர். இந்த நாட்டுக்கு கத்தோலிக்க மதத்தை கொண்டு வந்தவர்கள் பறங்கியர். கத்தோலிக்க மதத்தை கொண்டு வந்த பறங்கியர் எப்படி கர்தினாலுக்கு கொட்டவர்கள் ஆனார்கள்.
என்னை பற்றியே கர்தினால் மறைமுகமாக கூறியுள்ளார்
நாட்டுக்குள் கஞ்சாவை சட்டமாக்குவது, இரவு நேர வாழ்க்கை, கெசினோ பற்றி நானே பேசி வருகின்றேன். இதனால், என்னை கர்தினால் பறங்கி என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
எவரோ தவறாக வழிநடத்தியமை காரணமாகவே கர்தினால் கஞ்சா கதைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நான் பறங்கியர் அல்ல. எமது பரம்பரையில் உள்ளவர்கள் பண்டிதர்களான பௌத்த பிக்குகள் இருக்கின்றனர்.
இதனால், மதத்தலைவர்கள் சமய விவகாரங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. நான் தெளிவுப்படுத்துவது விளங்கவில்லை என்றால் நேரில் சென்று விளக்கப்படுத்த தயாராக இருப்பதாகவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.