இலங்கையின் நிலை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது! பாடகி யொஹானி
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது என பிரபல சிங்கள பாடகி யொஹானி தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன். நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம்.
எனது நாட்டு மக்களுக்கு உதவ, எனது குரலை பயன்படுத்துவேன். நான் எனது நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன்.
நான் மும்பையில் இருந்தாலும், எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக்குழுவினர் எல்லோரும் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri