"பெண்ணாக இருப்பதால் எளிதில் இலக்காகின்றேன்! உலக சுகாதார நிறுவன அதிகாரி மரியா வான் வேதனை
பெண் விஞ்ஞானிகள் சமூக ஊடகங்களில் பெரிதளவில் தாக்கப்பட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
வெள்ளிகிழமை அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க ஆண்டு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை கொரோனாவுக்கு எதிராக செயல்படவில்லை என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரேசில், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு கொலை விரட்டல்கள் மற்றும் இணைய துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக புகாரளித்தனர்.
பொதுவாகவே ஆண்களை விட பெண்களே எளிதான இலக்காக பார்க்கப்படுகின்றனர். இதை நான் என் உடன் பணிபுரிபவர்களிடையேகூட பார்க்கிறேன்.நான் இளைய பெண்ணாக இருப்பதாக எளிதான இலக்காக இருக்கிறேன்.
மேலும், நான் முக்கிய தகவல்களைப் பெற சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறேன். சில காரணங்களுக்காக மிக மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக வேண்டி இருந்தது. நான் தினசரி வேலை மற்றும் அதன்மீது கவனம் செலுத்துவதால் இதுபற்றியெல்லாம் யோசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.