எனக்கு எவரும் போட்டியில்லை! ரணில் பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டை முன்னேற்றுவதில் தான் கவனம் செலுத்துவதால் தனக்கு போட்டி எதுவும் கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “எனது திறமையை இரண்டு முறை நிரூபித்துள்ளேன். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது.
அவ்வாறு செய்தால் இலங்கை (Sri Lanka) நிதியை இழக்க நேரிடும். எனவே, அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றை நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |