இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன்! கமல் ஹாசன்
எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன்.
பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2021
ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதன்போது கடற்படை கப்பலில் மீன்பிடி படகு மோதியதில் படகு உடைந்து மூழ்கிய நிலையில் படகில் இருந்த மீனவர்கள் நால்வரும் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின்னர் குறித்த நான்கு மீனவர்களின் உடல்களும் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படைக்கு எதிராக இந்தியாவில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.