வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்த கடுமையான சர்வதேச சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகக்கணக்கில் அறிவிப்பு
விக்கிபீடியா பக்கத்தில் திருத்தப்பட்ட தனது புகைப்படத்தை தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்காவின் 45 ஆவது மற்றும் 47 ஆவது ஜனாதிபதி என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வெனிசுலாவின் பொறுப்பு (தற்காலிக) ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவில் வேறு எந்த தகவலையும் ட்ரம்ப் பகிரவில்லை எனவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இம்மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri