தோல்விக்கு நான் தான் காரணம்! - மனம் திறந்த ஷாய் ஹோப்
டி20 உலகக் கிண்ணத் தொடரின் பரபரப்பான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்தத் தோல்விக்குப் பிறகு அந்த அணிதலைவர் ஷாய் ஹோப் வருத்தத்துடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 195 ஓட்டங்களை குவித்தாலும், ஷாய் ஹோப் 33 பந்துகளில் வெறும் 32 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். அவரது மெதுவான ஆட்டம் அணியின் ஓட்டத்தை பாதித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து அவர் கூறுகையில், "நிச்சயமாக நாங்கள் இன்னும் சில ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக இந்த மைதானத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால், தொடக்கத்திலேயே நான் இன்னும் வேகமாக ஆடியிருக்க வேண்டும். எனது மெதுவான ஆட்டம் பின்னடைவை ஏற்படுத்தியது," என ஒப்புக்கொண்டார்.
ஆட்டத்தின் திருப்புமுனை
ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மற்றும் சஞ்சு சாம்சனின் துடுப்பாட்டம் குறித்து அவர் பேசியதாவது: "பும்ரா இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்.

அவர் பந்து வீசும் போது ஏதாவது ஒரு திருப்பம் நிகழும் என்று எங்களுக்குத் தெரியும். ஹெட்மயர் விக்கெட்டை அவர் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி எங்களது வெற்றிக் கனவை தகர்த்துவிட்டார்" என்றார். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டும், இந்த முக்கியமான "Virtual Quarterfinal" போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிப்பதாக ஹோப் தெரிவித்தார்.
அகீல் ஹொசைன் மற்றும் மோட்டி ஆகியோரின் பந்துவீச்சை அவர் பாராட்டினாலும், முக்கியமான தருணங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய அணி, தற்போது மும்பையில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam